சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் அதர்வா? புறநானூறு அப்டேட்

Published On 2024-10-03 16:19 GMT   |   Update On 2024-10-03 16:19 GMT
  • புறநானூறு படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
  • புறநானூறு படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க திட்டம்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.

கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை புறநானூறு படத்தில் நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவெடுத்தார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவெ வெளிவந்தது. தொடர்ந்து படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில், புறநானூறு படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் அதர்வா சிவகார்த்திகேயனின் தம்பியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரபல மலையாள நடிகர் ரோஷன் மாத்தியூ வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புறநானூறு படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News