பாலிவுட் சினிமா மிகவும் Toxic ஆகிவிட்டது- நடிகர் அனுராக் காஷ்யப் வேதனை
- விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
- பாலிவுட்டில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்துள்ளார்.
பிரபல இந்தி இயக்குனர் மற்றும் நடிகராவார் அனுராக் காஷ்யப். இவர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இதேபோல், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
மேலும் மலையாள திரைப்படமான ரைஃபில் கிளப் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
பாலிவுட்டில் ஹிட் படங்களை இயக்கிய அனுராக் கஷ்யப் சமீப காலமாக இந்தி சினிமாவைவிட தென்னிந்திய படங்களில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும், மும்பையில் வசிக்கும் அனுராக் இந்தாண்டு தென் இந்தியாவிற்கு குடியேற போவதாக கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.
ஆனால், அனுராக் காஷ்யப் பெங்களூருவில் குடி பெயர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தான் பாலிவுட்டில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் அனுராக் காஷ்யப் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-
திரைப்படத் துறையில் பணிபுரிபவர்களிடம் இருந்து நான் விலகி இருக்க விரும்புகிறேன். இந்த துறை மிகவும் Toxic ஆகிவிட்டது.
அனைவரும் யதார்த்தமற்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ரூ.500 கோடி, ரூ.800 கோடிகளில் திரைப்படம் எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
கலைக்கான மதிப்பு அங்கு போய்விட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.