அஜித் சார் தூக்கி விட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன்- உருக்கமாக பேசிய மகிழ் திருமேனி
- எம்புரான் படத்தின் டீசர் வெளியிட்டு விழா கேரளாவில் நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மகிழ் திருமேனி கலந்துக் கொண்டார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்புரான் படத்தின் டீசர் வெளியிட்டு விழா கேரளாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மகிழ் திருமேனி கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய மகிழ் திருமேனி, "உங்கள பத்தி பேசாம போக முடியாது. பத்ம பூஷன் விருது பெற்றிருக்கும் அஜித் சாருக்கு வாழ்த்துகள். அஜித் சார் கை கொடுத்து தூக்கி விட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன். பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி விடா முயற்சி வெளியாகிறது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக உருவாகி இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய பிரித்விராஜ், "சமீபத்தில் தமிழ் சினிமாவில் நான் பார்த்த சிறந்த டிரெய்லர்களுள் ஒன்று 'விடாமுயற்சி' டிரெய்லர். அந்த படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.