சினிமா செய்திகள்
மறைந்த மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்

மறைந்த மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்

Published On 2025-03-26 18:12 IST   |   Update On 2025-03-26 18:12:00 IST
  • மனோஜ் உடலுக்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜின் மகன் வினோத் கொள்ளி வைத்தார்.
  • தந்தைக்கு கொள்ளிக்குடம் தூக்கி மகள் அக்ஷிதா இறுதிச்சடங்கு செய்தார்.

தமிழ் திரை உலகில் இயக்குநர் இமயம் என போற்றப்பட்டு வருபவர் பாரதி ராஜா. இவரது மகன் மனோஜ் (வயது 48) நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரது மரணம் திரை உலகினரை மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து இன்று மாலை அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மனோஜ் உடலுக்கு அவரது 2 மகள்களும் கொள்ளிக்குடம் தூக்கி இறுதிச்சடங்கு செய்தனர். மனோஜ் உடலுக்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜின் மகன் வினோத் கொள்ளி வைத்தார். 

Tags:    

Similar News