சினிமா செய்திகள்

புஷ்பா 3 படத்தில் குத்து பாட்டுக்கு நடனம் ஆடும் ஜான்வி கபூர்

Published On 2025-01-24 16:22 IST   |   Update On 2025-01-24 16:22:00 IST
  • புஷ்பா முதல் பாகத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலில் நடிகை சமந்தா நடனமாடினார்.
  • புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலா நடனம் ஆடி ரசிகர்களை கொண்டாட வைத்தார்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றிருப்பதுடன் வசூலையும் வாரி குவித்துள்ளது. படத்தின் வெற்றிக்கு படத்தில் இடம் பெற்ற பாடல்களும் பெரிய காரணம்.

புஷ்பா முதல் பாகத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலில் நடிகை சமந்தா நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரதிபலித்தது. புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலா நடனம் ஆடி ரசிகர்களை கொண்டாட வைத்தார்.

 இந்நிலையில் புஷ்பா 3 என்ற பெயரில் படத்தின் 3-ம் பாகம் உருவாக உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடல்களின் வரவேற்பு பற்றி இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் கூறுகையில், "ஐட்டம் பாடலில் எந்த நடிகை நடனம் சர்வதேச அளவில் பாடல் பிரபலமாகும் என்பது எங்களுக்கு ஆரம்பத்திலேயே தெரியும். ஸ்ரீலீலா அற்புதமான நடன கலைஞர். என் இசையில் ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடனம் ஆடி இருக்கின்றனர். அந்த வகையில் புஷ்பா 3 உருவாகி வரும் நிலையில் படத்தில் இடம்பெறும் பாடலுக்கு ஜான்வி கபூர் பொருத்தமாக இருப்பார் என நான் விரும்புகிறேன். ஜான்வி கபூர் ஓர் அற்புதமான நடன கலைஞர்" என்றார்.

Tags:    

Similar News