null
தள்ளிப்போகும் 'தளபதி 69' ரிலீஸ்? - 2026 தேர்தல் காரணமா?
- முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது
- 'தளபதி 69' படம் இந்த வருடம் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என்று கூறப்பட்டது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69" என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்துக்கு 'நாளைய தீர்ப்பு' என பெயர் வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் கதாநாயகனாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு (1992 ) என்பதால் சென்டிமெண்டாக அந்த பெயரை விஜய் ஓகே செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த அக்டோபரில் தொடங்கிய "தளபதி 69" முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஏப்ரலில் படப்பிடிப்பு நிறைவடையும்.
இந்நிலையில் தற்போது தளபதி 69 அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக'தளபதி 69' படம் இந்த வருடம் அக்டோபரில் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ள நிலையில் இந்த 69 படம் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என்று கூறப்பட்டது.
எனவே 2026 பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்தால் அதற்கடுத்த 3 மாதத்தில் வர உள்ள தேர்தலுக்கு விஜய்க்கு நல்ல ரீச் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதற்கிடே நாளை மறுநாள் குடியரசு தினத்தன்று படத்தின் அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.