சினிமா செய்திகள்

'இந்த பாட்டு ஹிட்டாகும்னு தனுஷ் சார் அப்பவே சொன்னார்' - கட்சி சேர புகழ் சாய் ஓபன் டாக்

Published On 2024-07-15 14:45 IST   |   Update On 2024-07-15 14:45:00 IST
  • சாய் அபயங்கர், பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணி தம்பதியின் மகன் ஆவார்.
  • ஜி.வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், அனிருத் என அனைவரும் பாட்டைக் கேட்டு பாராட்டினர்.

சுயாதீன இசைக்கலைஞரான சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'கட்சி சேர' மற்றும் 'ஆச கூட' பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் சமீபகால சென்சேஷனாக இருந்து வருகிறது. இசை, குரல், பாடல் வரிகள், நடனம் என அனைத்திலும் இந்த பாடல்கள் ஸ்கோர் செய்துள்ளன.  சாய் அபயங்கர், பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணி தம்பதியின் மகன் ஆவார். தனது முதல் பாடலிலேயே ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த சாய் அபயங்கர், பாடல் குறித்த சுவாரஷ்யமான விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

 Full Viewஇசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹுமானுடன் வேலை பார்த்த ஹென்ரி குருவிலா தனது குரு என தெரிவிக்கும் சாய், அவரிடமே இசை தொடர்பாக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார். முதலில் 'கட்சி சேர' பாடலை கேட்ட ஏ.ஆர் ரகுமானுக்கு பாடல் பிடித்துப்போகவே அதை ஷேர் செய்துள்ளார். தொடர்ந்து ஜி.வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், அனிருத் என அனைவரும் பாட்டைக் கேட்டு பாராட்டினர்.

 

முக்கியமாக நடிகர் தனுஷ், பாடல் நல்லா இருக்கு, குரல் நல்லா இருக்கு, செம்ம கேட்சியா இருக்கு, கண்டிப்பா ஹிட்டாகும் என்று சொல்லி பாராட்டினார் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதன்படி கட்சி சேர பாட்டும், ஆச கூட பாட்டும் ஹிட்டாகியுள்ளது. சாய் அபயங்கர் அடுத்து என்ன பாட்டுடன் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News