சினிமா செய்திகள்
null

Fans ப்ளீஸ் சண்ட போடாதீங்க.. சந்தோஷமா இருங்க - ரசிகர்களுக்கு அஜித் கூறிய செய்தி

Published On 2025-01-11 21:22 IST   |   Update On 2025-01-11 21:28:00 IST
  • நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'.
  • அஜித் கலந்துக்கொண்ட 24 எச் சீரிஸ் ரேஸ் துபாயில் நடைப்பெற்று வருகிறது.

நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'.

அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் ரேசிங் செய்யும் வீடியோ மற்றும் ரேசிங் குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

அஜித் கலந்துக்கொண்ட 24 எச் சீரிஸ் ரேஸ் துபாயில் நடைப்பெற்று வருகிறது. இந்த ரேசில் அஜித் பங்கேற்க இருந்தது. ஆனால் சில சூழ்நிலை காரணமாக அந்த ரேசிங் போட்டியில் இருந்து ஓட்டுனராக விலகுவதாக இன்று மதியம் அறிக்கையை வெளியிட்டனர். தற்பொழுது அஜித் அவரின் ரசிகர்களுக்கு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது " ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய ரசிகர்கள் என்னைய பார்க்க வந்திருந்தாங்க. பார்க்க ரொம்ப எமோஷனாலா இருந்தது. நீங்க எல்லாரும் சந்தோஷமா ஆரோக்கியமா மன நிம்மதியோட வாழ கடவுள நான் வேண்டிக்கிறேன். குடும்பத்த பாருங்க, நேரத்தை வீணடிக்காதீங்க, நல்லா படிங்க, வேலைக்கு போறவங்க கடுமையா உழைச்சு வேலைப் பாருங்க. வொர்க் ஹார்ட், ப்ளே ஹார்ட். வெற்றி அடைந்தால் நல்ல விஷயம் தான். தோல்வி வந்தால் துவண்டு போய்விடாதீர்கள்.போட்டி மிகவும் முக்கியம், லவ் யூ ஆல். லவ் யூ ஆல் அன்கண்டிஷனலி. திரைத்துறையும் ரேசிங்கும் ஒன்று தான். இரண்டிலையும் அதற்கான உழைப்பை தந்தால் பலன் தானாக கிடைக்கும். தயவு செய்து சண்ட போடாதீங்க. நேரம் ரொம்ப குறைவாகத்தான் இருக்கிறது. சந்தோஷமா இருங்கள். உங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News