சினிமா செய்திகள்

கோவாவில் நடைப்பெற்ற சாக்ஷி அகர்வால் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?

Published On 2025-01-03 15:12 GMT   |   Update On 2025-01-03 15:12 GMT
  • மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கினார் நடிகை சாக்‌ஷி அகர்வால்
  • கடைசியாக அதர்ம கதைகள் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கினார் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து ராஜா ராணி, காலா மற்றும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் மனதில் பதிந்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

கடைசியாக அதர்ம கதைகள் திரைப்படத்தில் நடித்து இருந்தார். கெஸ்ட் மற்றும் தி நைட் திரைப்படத்தில் நடித்து உள்ளார் இந்தாண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. கோவாவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

 

 

குழந்தை பருவத்தில் இருந்தே நண்பராக இருந்து வந்த நவனீத் மிஸ்ரா என்பவரை சாக்ஷி தற்போது காதலித்து கரம்பிடித்து இருக்கிறார். சர்ப்ப்ரைசாக அவர் போட்டோக்களை வெளியிட்ட நிலையல் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News