சினிமா செய்திகள்

13 வருடங்களுக்கு பிறகு ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் புகார்

Published On 2023-12-22 11:53 IST   |   Update On 2023-12-22 11:53:00 IST
  • படத்தின் அனைத்து பாகங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.
  • பைக், கார் ஸ்டண்ட்களை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டு இருந்தது.

இயக்குனர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' (The Fast and Furious). இப்படத்தின் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பத்தாவது பாகமும் உருவானது. இப்படத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பைக், கார் ஸ்டண்ட்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த வின் டீசல் மீது அவரது உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2010-ம் ஆண்டு வின் டீசலிடம் பணிபுரிந்த அஸ்ட்ரோ ஜோனாசன் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

படப்பிடிப்பின் போது அட்லாண்டாவில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் பல பெண்களுடன் அறை எடுத்து வின் டீசல் உல்லாசமாக இருந்தார். அதிகாலை நேரத்தில் சினிமா புகைப்படக் கலைஞர்கள் வருவதை அறிந்து அனைவரையும் க்ளியர் செய்துக் கொண்டிருந்தோம். அவரை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்லும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அந்த பெண்கள் எல்லாம் சென்று விட்ட நிலையில், வின் டீசல் என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். நான் அவருக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில், அவரது சகோதரி என்னை அடுத்த நொடியே வேலையில் இருந்து நீக்கி விட்டார். இவ்வாறு அஸ்ட்ரோ ஜோனாசன் கூறியுள்ளார்.

13 வருடங்களுக்கு பிறகு நடிகர் மீது அவரது உதவியாளர் பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News