நாளை முதல் ஓடிடியில் வருகிறான் கருடன்
- வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது.
- படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது
இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கருடன் அதிரடி திரில்லர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'கருடன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கருடன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. திரைக்கதை, வசனங்கள், நடிப்பு என இப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்று புகழ் பெற்றுள்ளது. கிராமத்து திரைக்கதையில் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று இந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இணைந்துள்ளது.
விடுதலை படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கிய நகைச்சுவை நடிகர் சூரி, இப்படத்தில் நாயகனாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தில் சூரியின் நடிப்பை பலரும் பாராட்டினர். நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டு இருந்தவர். விடுதலை படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுப்பட்ட சூரியாக திரையில் வந்தார். அதற்கடுத்து கருடன் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி மக்கள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் நாளை [ஜூலை 3] வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.