மிருகத்த எழுப்பி.. கோவத்த கெளப்பி - OG Sambavam பாடல் லோடிங்
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
- மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ,நேற்று மாலை வெளியானது. இந்த பாடலுக்கு OG Sambavam என தலைப்பு வைத்துள்ளனர். OG என்றால் ஒர்ஜினல் கேங்ஸ்டர் என அர்த்தம். இப்பாடலை ஜி.வி பிரகாஷ் மற்றூம் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார்.
இந்நிலையில் பாடலின் இடையே சில வரிகளை நடிகர் அஜித் பேசிருப்பதாக ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாடல் இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாக இருக்கிறது. பாடலை குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.