null
Its a Super Wrap - கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.
- இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் .மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.