ரவி தேஜா நடித்த மாஸ் ஜாதரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
- இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரவி தேஜாவிற்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- சித்தாரா எண்டெர்டெயின்மண்ட்ஸ் மற்றும் ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. இவரை ரசிகர்கள் அன்போடு மாஸ் மகாராஜா என அழைப்பர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரவி தேஜாவிற்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரவி தேஜா அடுத்ததாக நடித்து இருக்கும் மாஸ் ஜாதரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் காட்சியில் மிகவும் ஸ்டைலாகவும், மாஸாகவும் இருக்கிறார் ரவி தேஜா. படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். டீசரில் இடம் பெற்றுள்ள வசனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனரான பானு போகவரபு இயக்கியுள்ளார். படத்தின் இசையை பீம்ஸ் செசிரொலியோ மேற்கொண்டுள்ளார்.
சித்தாரா எண்டெர்டெயின்மண்ட்ஸ் மற்றும் ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. விது அய்யனா ஒளிப்பதிவை மேற்கொள்ள நவின் நூலி படத்தொகுப்பை செய்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.