100 மில்லியன் பார்வைகளை கடந்த NEEK படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல்
- தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது.
ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்.
பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது. இதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இப்படத்தில் அடுத்து வெளியான காதல் பெயில் ஆந்தமும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ் தற்பொழுது இட்லி கடை திரைப்படத்தை இயக்கி வருகிறார் அடுத்ததாக அமரன் திரைப்பட இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.