ஆஸ்கர் மேடையில் எதிரொலித்த இந்தி மொழி
- இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் நடைப்பெற்றது.
- Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது .
இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் நடைப்பெற்றது. பல்வேறு திரைப்பிரபலங்கள், இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளை வழங்கியது.
Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது . சிறந்த திரைப்படம் , திரைக்கதை, இயக்குனர், நடிகை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருதை அள்ளியுள்ளது.
இந்த நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்ப்பதால் கெனைன் ஓ பிரைன் அவரது தொடக்க உரையை ஆங்கில மொழியில் மட்டுமல்லாமல் இந்தி, ஸ்பானிஷ், சீன மற்றும் பிற மொழிகளிலும் பேசினார்.
அதில் அவர் இந்தியில் கூறியதாவது " நமஸ்தே. இந்தியாவில் தற்பொழுது காலையாக இருக்கும். நீங்கள் அனைவரும் 97- வது அகாடமி விருது வழங்கும் விழாவை மகிழ்ச்சியாக காலை உணவை சாப்பிட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்" என கூறியுள்ளார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் இந்தியில் பேசியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியில் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.