null
6 பிரிவுகளில் போட்டி.. 5-இல் வெற்றி.. ஒரே படத்திற்கு 4 விருதுகளை வென்ற சீன் பேக்கர் - அசத்திய 'அனோரா'
- சீன் பேக்கர் இயக்கத்தில் வெளியானது அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான அனோரா.
- இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது
2024 ஆம் ஆண்டு சியான் பேகர் இயக்கத்தில் வெளியானது அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான அனோரா. இப்படத்தின் தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் சீன் பேக்கர் மேற்கொண்டுள்ளார்.
இப்படத்தில் Mikey Madison, Mark Eydelshteyn,Yura Borisov,Karren Karagulian, Vache Tovmasyan மற்றும் Aleksei Serebryakov முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் நடைப்பெற்றது. பல்வேறு திரைப்பிரபலங்கள், இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் இந்த ஆஸ்கர் விழாவில் அனோரா திரைப்படம் 5 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை 25- வயதே ஆன மைக்கி மாடிசன் வென்றுள்ளார். சிறந்த இயக்குனர், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பிற்கான விருதை சீன் பேக்கர் வென்றார். ஒரு நபர் நாங்கு ஆஸ்கர் விருதினை வாங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.