RRR திரைப்படம் உருவான விதம்.. ஆவண படத்தின் டிரெய்லர் வெளியிட்ட படக்குழு
- 2022 - ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.
- 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
2022 - ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் நடித்தனர்.
இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் உருவான விதத்தை படக்குழு ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த ஆவண திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு RRR Behind & Beyond என தலைப்பிட்டுள்ளனர். இத்திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகவுள்ளது. விரைவில் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.