சினிமா செய்திகள்

கல்கி 2898 ஏடி படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் களமிறங்கும் சந்தோஷ் நாராயணன்

Published On 2024-12-17 16:34 GMT   |   Update On 2024-12-17 16:34 GMT
  • நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் படம் இயக்குகிறார்.
  • இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து SK 23 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

அதே சமயத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் படம் இயக்குகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் கான் பிறந்தநாளான டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் இசை மிகப் பெரியளவில் ஹிட்டானது. இந்த படத்தின் பின்னணி இசை உலகம் முழுவதும் பேசப்பட்டது. இந்த வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் காலடி தடத்தை பதிக்கவுள்ளார் சந்தோஷ் நாராயணன்

திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜனவரி மாதம் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சல்மான் இப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News