சினிமா செய்திகள்

அலங்கு திரைப்படக்குழுவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்

Published On 2024-12-17 12:03 GMT   |   Update On 2024-12-17 12:03 GMT
  • உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து 'அலங்கு' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
  • அலங்கு திரைப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து 'அலங்கு' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' என்ற இரு திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடித்துள்ளார் . அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.

இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். திரைப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

படத்தின் டிரெய்லர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் அலங்கு திரைப்பட குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். படத்தின் டிரெய்லர் மிகவும் சுவாரசியமாகவும், நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. என பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News