பாலிவுட் திரையுலகை எண்ணி அருவருப்பாக உணர்கிறேன் - அனுராக் காஷ்யப்
- இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அனுராக் காஷ்யப்.
- மகாராஜா திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் லியோ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சயமானார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை மற்றும் மலையாள திரைப்படமான ரைஃபில் கிளப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்தி சினிமாவை விட தென்னிந்திய சினிமாவில் மிகவும் ஆர்வமுடையவர்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் " இந்தி சினிமா துறையில் வேலை செய்டு, படங்களை இயக்கி வெறுத்து விட்டே. புதிதான் எந்த முயற்சியும் அங்கு என்னால் எடுக்க முடியவில்லை. தயாரிப்பாளர்களிடம் போய் சென்றால் வணிக நோக்கத்துடம் மட்டுமே ஒரு திரைப்படத்தை அணுகுகின்றனர். ஏற்கனவே ஒரு ஹிட்டான படங்களை மட்டுமே இந்தி சினிமா ரீமேக் செய்யும். புதிதா அவர்கள் எதையும் முயற்சி செய்ய மாட்டார்கள். இதனால் நான் என் வாழ்விடமாக இருந்த மும்பை விட்டு அடுத்தாண்டு தென் இந்தியாவிற்கு குறியேறவுள்ளேன். அங்கு சென்றால் எனக்கு ஒரு தூண்டுதல் கிடைக்கிறது ஆனால் இங்கு இருந்தால் நான் இப்படியே இருந்து வயதாகி இறந்துவிடுவேன்."என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.