தனுஷை பார்க்கும் போது எனக்கு மிகவும் உத்வேகமாக இருக்கும்- அருண் விஜய்
- தனுஷ் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- இந்தப் படம் இம்மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது.
திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என பல பரிணாமங்களை கொண்டவர் தனுஷ். இவர் ராயன் படத்தைத் தொடர்ந்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இம்மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.
படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இந்தப் படத்தின் கதை இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் அருண் விஜய், எஸ்.ஜே சூர்யா மற்றும் இயக்குனர்களான ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
விழாவில் பேசிய அருண் விஜய் " நடிகர் துனுஷ் சார் ஒரு மல்டி டாஸ்கர். இட்லி கடை படப்பிடிப்பின் போது இடைவேளை நேரத்தில் சென்று மற்றொரு கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார். மற்றொரு நாள் காரவேனில் பார்க்கும் போது ஜி.வி பிரகாஷுடன் பாட்டு ஒன்றை ரெக்கார்ட் செய்துக் கொண்டு இருக்கிறார். அவரை பார்க்கும் போது மிகவும் உத்வேகமாக உள்ளது. இதை நேரில் பார்க்க எனக்கு பாக்கியம் கிடைத்தது." என கூறினார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.