'சுழல்' 2 வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
- சுழல் வெப் தொடர் பல்வேறு தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.
- ‘சுழல்’ இணையத்தொடரின் 2ம் பாகம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் ' சுழல்- தி வோர்டெக்ஸ்'.
இயக்குனர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்.பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த வெப் தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். அமேசான் பிரைமில் 2022 ஆம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியான இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக புஷ்கர் - காயத்ரி தங்களது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.