சினிமா செய்திகள்

விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு

Published On 2025-02-11 21:05 IST   |   Update On 2025-02-11 21:05:00 IST
  • விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
  • இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குனர் தமிழ் எழுதியுள்ளார்.

விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான பூஜை விழா நேற்று நடைப்பெற்றது.

இந்த பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், ஜெகதீஷ் கலந்துக் கொண்டனர். இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சுரேஷ் இயக்கவுள்ளார். இவர் வெற்றி மாறனின் துணை இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குனர் தமிழ் எழுதியுள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையாக இப்படம் உருவாகவுள்ளது.

படத்தின் இசையை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொள்ளவுள்ளார்.பிலோமின்ராஜ் படத்தொகுப்பை செய்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தை பற்றிய மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


Tags:    

Similar News