சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன் - விஜய்

Published On 2024-10-01 12:39 GMT   |   Update On 2024-10-01 12:39 GMT
  • தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
  • இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்குபின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரத்த குழாயில் உள்ள அடைப்பும் வீக்கமும் கண்டறியப்பட்டது. உடனடியாக அதற்கேற்ற சிகிச்சையை டாக்டர் சாய்சதீஷ் தலைமையிலான டாக்டர் குழுவினர் அளித்தனர்.

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குணமடைந்து வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என அறிவித்துள்ளனர்.

இதுக்குறித்து நடிகர் மற்றும் தவெக தலைவரான விஜய் விரைவில் குணமடையுமாறு அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவை பகிர்ந்துள்ளார் அதில் "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்." என கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News