சினிமா செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற சூரியின் 'கொட்டுக்காளி' - வீடியோ

Published On 2024-06-23 21:34 IST   |   Update On 2024-06-23 21:34:00 IST
  • பிஎஸ் வினோத்ராஜின் அடுத்த படைப்பாக சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் விளங்குகிறது
  • சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது.

திரைப்படங்களுக்கு கிடைக்கும் அதிகப்பட்ச அங்கீகாரம் ரசிகர்களின் கைதட்டலே என்றாலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் தாங்கள் பிரசவித்த திரைப்படங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இயக்குனருக்கு பெரும் உத்வேகத்தையும் தங்களின் பாதையில் சரியாவே பயணிக்கிறோம் என்ற உறுதியையும் தருவதாக அமைந்துள்ளது.

அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜின் அடுத்த படைப்பாக சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் விளங்குகிறது. டீசர்மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது. 

 

Full View

அந்த வகையில் தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில்  கொட்டுக்காளி பட இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ், நடிகை அனா பென் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இதுதவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News