சினிமா செய்திகள்
null

வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணமா?

Published On 2024-10-01 11:25 GMT   |   Update On 2024-10-01 11:36 GMT
  • சின்னதிரை மற்றும் வெள்ளிதிரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார்.
  • ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் ரீச் கிடைத்தது. ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின் மனகசப்பால் பிரிந்து விட்டனர்.

தற்பொழுது அவர்கள் இருவரும் இணைந்து Mr&Mrs என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் வனிதா கடலோரத்தில் ராபர்ட் மாஸ்டருக்கு ப்ரொபோஸ் செய்வது போல் சேவ் தி டேட் என்ற தலைப்பில் காட்சி அமைந்துள்ளது.

 

இதனால் நெட்டிசன்கள் மீண்டும் வனிதா திருமணம் செய்துக் கொள்ள போகிறாரா. என ப்லவாறு கமெண்டுகளை கொட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால் இது அந்த படத்திற்கான ப்ரோமோஷன் என சிலர் கூறி வருகின்றனர். எது உண்மை என்று அக்டோபர் 5 ஆம் தேதி பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News