சினிமா செய்திகள்
மதுரையில் கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனியின் உடல் நல்லடக்கம்
- பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.
- ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஹூசைனி சிகிச்சை பெற்று வந்தார்.
1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார்.
இந்நிலையில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹூசைனி நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஷிஹான் ஹூசைனியின் உடல் மதுரை காஜிமார் தெருவில் உள்ள பெரிய பள்ளியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.