சினிமா செய்திகள்

லியோ ரிலீஸ்: தியேட்டரிலேயே மோதிரம் மாற்றி திருமண நிச்சயம் செய்து கொண்ட ஜோடி

Published On 2023-10-19 10:28 IST   |   Update On 2023-10-19 10:28:00 IST
  • சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழகத்தில் காலை 9 மணிக்கு படம் ரிலீஸ்
  • மேளம் தாளத்துடன் ரசிகர்கள் தியேட்டர்கள் முன் குவிந்தனர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏழு மணி காட்சிக்கு அனுமதி வழங்காததால் காலை 9 மணிக்கு படம் வெளியானது.

விஜய் ரசிகர்கள் காலையில் இருந்ததே திரையரங்குகள் முன் திரண்டனர். மேளம், தாளத்துடன் ஆடிப்பாடி கொண்டாடினர்.

9 மணி ஆனதும் ரசிகர்கள் திரையரங்கு சென்று படம் பார்த்து வருகின்றனர். புதுக்கோட்டையில் படம் பார்க்க ஒரு ஜோடி வந்தது. இந்த ஜோடி திரையரங்கில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டு திருமண நிச்சயம் செய்து கொண்டது. திருமண நிச்சயம் செய்து கொண்ட அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் ரசிகர்களுடன் இணைந்து அந்த ஜோடி படம் பார்த்தது.

Tags:    

Similar News