சினிமா செய்திகள்

கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ரிலீஸ் ஆனது லியோ: விஜய் ரசிகர்கள் உற்சாகம்

Published On 2023-10-19 07:25 IST   |   Update On 2023-10-19 07:25:00 IST
  • தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு திரையிடப்படவில்லை
  • கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அதேவேளையில் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

விஜய் ரசிகர்கள் இன்று அதிகாலை முதல் தியேட்டர் முன் பெருமளவில் திரண்டு படத்தை பார்க்க வந்திருந்தனர். காலை ஏழு மணி காட்சிக்கும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டனர்

சிறப்புக் காட்சி முடிந்து வெளியில் வந்த ரசிகர்களிடம், படம் எப்படி இருக்கிறது? என்று தந்தி டி.வி. சார்பில் கேட்கப்பட்டது. அப்போது ரசிகர்கள் படம் வேற லெவல். வசூல் ஆயிரம் கோடி என படத்தை பாராட்டினர்.

அதேபோன்று ஆந்திரா, கர்நாடக மாநிலத்திலும் லியோ படம் இன்று காலை வெளியானது.

Tags:    

Similar News