சினிமா செய்திகள்
null

த.வெ.க. தலைவர் விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

Published On 2024-08-22 09:36 GMT   |   Update On 2024-08-22 15:28 GMT
  • சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை இன்று நடிகர் விஜய் வெளியிட்டார்.
  • தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.

சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை இன்று நடிகர் விஜய் வெளியிட்டார்.

சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தொண்டர்களின் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம் என்று கூறினார்.

இந்நிலையில் விஜய்க்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா என கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய பிரம்மாண்டமான இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News