மம்மூட்டியின் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தின் மார்கழி பாடல் வெளியீடு
- இயக்குனர் கவுதம் மேனன் தற்பொழுது டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படத்தை இயக்கி உள்ளார்.
- திரைப்படம் கடந்த 23 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் கவுதம் மேனன் தற்பொழுது டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார். திரைப்படம் கடந்த 23 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க விஷ்ணு ஆர் தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் ஒரு மெதுவாக செல்லும் ஒரு கிரைம் திரில்லர் பாணியில் கதைக்களம் உருவாகியுள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்ப்பாராத வகையில் அமைந்து இருப்பது பார்வையாளர்களை குஷியாக்கியுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் மார்கழி பாடலின் வீடியோ பாடல் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.