சினிமா செய்திகள்
null

என்னைக் கொலை செய்ய நிறைய பேர்.. சிக்கந்தர் டீசரில் 'லாரன்ஸ் பிஷ்னோய்' - சல்மான் கான் செய்த சம்பவம்

Published On 2025-01-01 08:50 GMT   |   Update On 2025-01-01 08:51 GMT
  • ஹெல்மெட்டில், இரண்டு கொம்புகளைக் காண்கிறோம், அவை பிளாக் பக் வகை மான்களுடைய கொம்புகளை ஒத்திருக்கும்.
  • எனது உயிரை எடுக்க பலர் முயற்சிப்பதாக நான் கேள்விப்பட்டேன்

பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.

படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சல்மான் கான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது அதில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்-ஐ சீண்டும் விதமாக சல்மான் கான் டீசரின் காட்சிகளும், வசனமும் இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகி உள்ளது.

டீசரில், கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்த கொலையாளிகள் நிறைந்த அறைக்குள் சல்மான் கான் நுழைவதைப் பார்க்கிறோம்.

 

அவர்களின் ஹெல்மெட்டில், இரண்டு கொம்புகளைக் காண்கிறோம், அவை பிளாக் பக் வகை மான்களுடைய கொம்புகளை ஒத்திருக்கும். இது சல்மானை சிக்கலில் சிக்க வைத்த புகழ்பெற்ற பிளாக்பக் மான் வேட்டை வழக்கை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். டீசரில் 00:38க்கு நிறுத்திப் பார்த்தால், ஹெல்மெட் அணிந்திருக்கும் கதாபாத்திரத்தை சல்மான் கான் சுட்டு வீழ்த்துகிறார்.

டீசரில், சல்மான் கான், " சுனா ஹை போஹோட் லாக் மேரே பீச்சே படே ஹைன், பாஸ் மேரே பீச்சே முட்னே கி டெர் ஹை (எனது உயிரை எடுக்கும் முயற்சியில் பலர் என்னை பின்தொடர்கிறார்கள் என நான் கேள்விப்பட்டேன், நான் திரும்பி நிற்கும் [அடிக்கும்] வரை காத்திருங்கள் என்று ஒரு டயலாக்கையும் கூறியுள்ளார். இது நேரடியாக லாரன்ஸ் பிஷ்னோய் -ஐ தாக்குவதாக உள்ளது என சல்மான் ரசிகர்கள் ஃ பயர் விட்டு வருகிறார்கள்.

 

சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சினிமா ஷூட்டிங்கின்போது கரும்புள்ளி [blackbuck] மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார்.

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வாழும் பிஷ்னோய் சமூகத்தினர் பிளாக்பக் மான்களை புனித விலங்காக கருதுவதால் சல்மான் கான் அவற்றை வேட்டையாடியது அவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக அமைந்தது.

இந்நிலையில் இதற்காக லாரான்ஸ் பிஷ்னோய் என்ற பிரபல ரவுடியின் கும்பல் சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்தது.

அவரது வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் இறங்கிய அந்த கும்பல் சல்மானுக்கு நெருக்கமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் வைத்து சுட்டுக்கொலை செய்தது. இதனைத்தொடர்ந்து சல்மானுக்கு Y கேட்டகிரி பாதுகாப்பு வழங்கப்பட்டது.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News