null
அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு
- அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
விடாமுயற்சி திரைப்படம் வருகிற 6-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். மத்திய அரசின் உயரிய விருதகளில் பத்மபூஷன் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.