ஓடிடி-ல் வெளியானது 'Primetime with the Murthys'
- ஜென் Z பிரிவினரின் நவநாகரீக வாழ்க்கை எப்படி உள்ளது என இந்த படம் பிரதிபலிக்கிறது.
- ஆங்கிலம், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது.
எம் டிவி ஒரிஜினல் படைப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ் ஓடிடி தொடர் இன்று மாலை வெளியாகியுள்ளது.
90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் பிரச்சனைகளை தாண்டி சமீப காலமாக அதிக பிரச்சனைகளை சந்தித்து வரும் ஜென் Z பிரிவினரின் நவநாகரீக வாழ்க்கை எப்படி உள்ளது என இந்த படம் பிரதிபலிக்கிறது.
அவர்கள் சந்திக்கும் சவால்களை காமெடி கலந்த கருத்துள்ள தொடராக ரசிகர்களுக்கு வழங்க எம் டிவி எடுத்துக் கொண்ட பெரும் முயற்சி தான் 'பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ்'.
இந்தத் தொடர் பார்வையாளர்களுக்கு அவர்களின் கருத்து நோக்கங்களை இடைநிறுத்தி நகர்ப்புற வாழ்க்கையின் சவால்களைப் பிரதிபலிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்த தொடர் இன்று ஜியோ சினிமா பிரீமியத்தில் மாலை ஆங்கிலம், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது.
'பிரைம் டைம் வித் தி மூர்த்திஸ்' படத்தின் இயக்குநரும், சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்ற இளைய திரைப்படத் தயாரிப்பாளருமான அரவிந்த் சாஸ்திரி, இந்த தொடர் குறித்து உற்சாகமாக பகிர்ந்துள்ளார்.