சினிமா செய்திகள்

ரஜினி Back Bencher.. அமிதாப் First Bencher - ஞானவேல் சொன்ன குட்டி ஸ்டோரி

Published On 2024-10-08 11:12 GMT   |   Update On 2024-10-08 11:12 GMT
  • இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் வேட்டையன்.
  • இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது.

இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த நேர்காணலில் இயக்குனர் ஞானவேல் ஒரு சுவாரசியமான தகவலை கூறினார் அதில் அவர் " அமிதாப் பச்சன் சார் ஃபர்ஸ்ட் பென்ச் மாணவரைப் போல அடுத்த நாளுக்கான காட்சிக்கான வசங்கள், காட்சி வடிவல், நான் எவ்வாறு நடிக்க வேண்டும் என அனைத்தையும் கேட்டு நச்செரிப்பார், அவருடன் இதை கூறுவதே மிகப்பெரிய சிரமம் ஆக இருக்கும். ஆனால் ரஜினிகாந்த் சார் அப்படி கிடையாது காட்சியின் வசனத்தை, டயலாக் பேப்பரை முன்னாள் கொடுத்தால் கூட படப்பிடிப்பின் போது பார்த்துக் கொள்ளலாம் என அசால்டாக கூறிவிடுவார்" என மிகவும் நகைச்சுவை பாணியில் கூறியுள்ளார்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News