சினிமா செய்திகள்

மோகன்லாலின் எம்புரான் படத்தின் டிரெய்லருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Published On 2025-03-20 14:47 IST   |   Update On 2025-03-20 14:47:00 IST
  • லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
  • இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கான டிரெய்லர் இன்று 5 மொழிகளிலும் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3.50 நிமிடம் ஓடும் இந்த ட்ரெய்லரில் மோகன்லால் எப்படிப்பட்டவர் என்பதையும், முதல்வராகப் பொறுப்பேற்ற டோவினோ தாமஸின் அரசியலையும் இந்த பாகம் பேசும் எனத் தெரிகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "அன்புள்ள மோகன்லால் நடித்து பிருத்விராஜ் இயக்கிய திரைப்படமான எம்புரான் படத்தின் டிரெய்லரை பார்த்தேன். மிக ஃபெண்டாஸ்டிக்கான வொர்க். படக்குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கடவுளிம் ஆசிர்வாதங்களுடன்" என கூறியுள்ளார்.

Full View

Tags:    

Similar News