null
ஆங்கில புத்தாண்டு- ரசிகர்களை சந்தித்த ரஜினி
- ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.
- ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியதுடன் அனைவரையும் நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கைவிட்டு விடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வெல்கம்-2025 என அவர் நடித்த 'பாட்ஷா' படத்தில் இடம் பெற்ற வரிகளை குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறி இருக்கிறார்.
மேலும் பண்டிகை நாட்களில் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு ரசிகர்களை சந்திப்பது வழக்கம். கடந்த தீபாவளி அன்றும் ரசிகர்களை சந்தித்தார்.
புத்தாண்டையொட்டி ரஜினிகாந்தை எதிர்பார்த்து நள்ளிரவு முதல் அவரது வீட்டு முன்பு ரசிகர்கள் காத்திருந்தனர். இன்று காலை 9 மணியளவில் ரஜினி வீட்டில் இருந்து வெளியில் வந்து ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியதுடன் அனைவரையும் நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
புத்தாண்டு தினத்தில் ரஜினியை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்