இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் ரஜினிகாந்த் - அப்போலோ அறிக்கை
- தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- அதற்குபின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்குபின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரத்த குழாயில் உள்ள அடைப்பும் வீக்கமும் கண்டறியப்பட்டது. உடனடியாக அதற்கேற்ற சிகிச்சையை டாக்டர் சாய்சதீஷ் தலைமையிலான டாக்டர் குழுவினர் அளித்தனர்.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ரஜினிகாந்த் தற்பொழுது சீராக உள்ளார். அறுவை சிகிச்சையில்லாமல் இருதயத்தில் கதீட்டர் மூலம் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.