சினிமா செய்திகள்

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்... கை விட மாட்டான்... புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்த ரஜினிகாந்த்

Published On 2025-01-01 02:19 GMT   |   Update On 2025-01-01 02:19 GMT
  • புத்தாண்டை கடற்கரை, நட்சத்திர விடுதிகளில் வாண வேடிக்கையுடன் பொதுமக்கள் வரவேற்றனர்.
  • கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டை கடற்கரை, நட்சத்திர விடுதிகளில் வாண வேடிக்கையுடன் பொதுமக்கள் வரவேற்றனர். சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளை மக்கள் பரிமாறி உற்சாகம் அடைந்தனர். மேலும், கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பாட்ஷா பட வசனத்தை குறிப்பிட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில்,

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.

கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News