விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..! அடுத்தடுத்து வெளியாகும் GOAT சர்ப்ரைஸ் அப்டேட்ஸ்
- நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகிறது.
- கோட் படத்தின் அடுத்த அப்டேட் குறித்து அறிய ரசிகர்கள் ஆவல்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் "விசில் போடு" ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைதொடர்ந்து, கோட் படத்தின் இரண்டாவது பாடல், "சின்ன சின்ன கண்கள்" நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நாளை நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, இந்த பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், அடுத்த சர்ப்ரைசாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " தளபதி விஜய் அண்ணா பிறந்தநாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் வேணாமா..! நள்ளிரவு 12.01 மணிக்கு சந்திப்போம்..ஏனென்றால் இது கோட் பிறந்தநாள் ஷாட்ஸ்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனால், கோட் படத்தின் அடுத்த அப்டேட் குறித்து அறிய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.