"மிஸ் யூ ஆல்.." விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய உருக்கமான கடிதம்
- நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்டார்.
- மீராவின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மகள் உள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மீராவின் உடல் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விசாரணையின் போது ஒரு கடிதம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில்'ஐ லவ்யூ ஆல். மிஸ் யூ ஆல்' என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், பத்து வரிகள் கொண்ட அந்த கடிதம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதாகவும் இந்த கடிதம் மன அழுத்தத்தில் இருந்தபோது எழுதியதா? அல்லது தற்கொலை செய்யும் முன்பு எழுதியதா? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.