சினிமா செய்திகள்
null

காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக 'விக்ரம்' பட பிரபலம் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

Published On 2023-02-14 03:29 GMT   |   Update On 2023-02-14 04:21 GMT
  • மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ்.
  • இவரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் விஷ்ணு இடவன்.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் விஷ்ணு இடவன். அதேசமயம் இவர் லோகேஷ் கனராஜ் படங்களுக்கு பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மாஸ்டர் படத்தில் பொளக்கட்டும் பற பற, விக்ரம் படத்தில் வந்த போர்கண்ட சிங்கம் மற்றும் நாயகன் மீண்டும் வரான் உள்ளிட்ட பாடல்களை இவர் எழுதியுள்ளார்.


விஷ்ணு இடவன்


இதனிடையே விஷ்ணு இடவன் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் விஷ்ணு இடவன் திடீரென அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மறுப்பதாக தெரிவித்து சென்னை திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

Tags:    

Similar News