சினிமா செய்திகள்

விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் அஜித் இரங்கல்

Published On 2023-12-29 13:04 IST   |   Update On 2023-12-29 13:04:00 IST
  • விஜயகாந்தின் உடல் சென்னை, அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
  • இவரது உடல் மதியம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

நடிகரும் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


முன்னணி நடிகர்களான, கமல், ரஜினி, விஜய், குஷ்பு, விஜய் ஆண்டனி என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் சென்னை, அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவரது உடல் மதியம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தே.மு.தி.க. அலுவலகத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.


இந்நிலையில், விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது, விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் சுதீஷிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயில் இருப்பதால் இறுதி அஞ்சலிக்கு வரமுடியவில்லை என அஜித் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News