சினிமா செய்திகள்

அஜித்

null

அஜித்தின் துணிவு படப்பிடிப்பு நிறைவு? டிரெண்டாகும் ஹேஷ் டேக்

Published On 2022-10-11 14:30 IST   |   Update On 2022-10-11 14:31:00 IST
  • எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படம் குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

 

அஜித் - சமுத்திரகனி

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், சிபி ஆகியோர் நடிகர் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

துணிவு

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த துணிவு படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்பட்டதை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் துணிவு பொங்கல் 2023 என்ற ஹேஷ்டாக்கையும் டிரண்ட் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News