சினிமா செய்திகள்

அமைதியான அமலா பால்.. குழப்பத்தில் ரசிகர்கள்

Published On 2023-10-19 14:21 IST   |   Update On 2023-10-19 14:21:00 IST
  • நடிகை அமலா பால் பல படங்களில் நடித்துள்ளார்.
  • இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்டவர்.

சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.


அமலா பால் பதிவு

இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். நண்பர்கள் உடன் ஜாலியாக சுற்றுலா செல்வதும் பாருக்கு செல்வதும் என கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

கவர்ச்சியாக வலம் வந்த அமலா பால் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமைதியாக தியானம் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து கவர்ச்சி அமலாபால் அமைதியான அமலாபால் ஆக மாறியது ஏன்? என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.


Tags:    

Similar News