சினிமா செய்திகள்

பில்போர்ட் தளத்தில் இடம் பிடித்த அனிருத் பாடல்.. எந்த படத்திலிருந்து தெரியுமா?

Published On 2023-09-20 14:30 IST   |   Update On 2023-09-20 14:31:00 IST
  • தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்.
  • இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத், முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் அனிருத்தின் இசை பெரிது பேசப்பட்டது. இவர் தற்போது விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.


தமிழ் திரையுலகில் கலக்கி கொண்டிருந்த அனிருத், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். இப்படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விரைவில் ரூ.1000 கோடியே எட்டி விடும் என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர் மத்தியில் உள்ளது.


இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல் பில்போர்ட் தளத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது, உலகின் பிரபலமான பில்போர்ட் தளத்தின் குளோபல் 200 பிரிவில் 'ஜவான்' படத்தில் இடம்பெற்றிருந்த 'சலேயே' (chaleya) பாடல் 97-வது இடத்தை பிடித்துள்ளது. இதனை அனிருத் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News