சினிமா செய்திகள்

மக்கள் விழித்துக் கொள்ள நான் பலியாடு ஆகிறேன்- ஏ.ஆர்.ரகுமான் வேதனை

Published On 2023-09-11 17:21 IST   |   Update On 2023-09-11 17:21:00 IST
  • சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.


இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.



இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது இணையப் பக்கத்தில், "என்னை சிலர் சிறந்தவர் என அழைக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொள்வதற்கு இந்த முறை நான் பலியாடு ஆகிறேன். உலகத் தர கட்டமைப்பு, சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் போக்குவரத்து, கூட்ட நெரிசலுக்கான மேலாண்மை, விதிகளை பின்பற்றும் ரசிகர்கள் அமைய வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்க வேண்டும். இறைவனை நாடினால் நடக்கும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News