சினிமா செய்திகள்
null

இந்த களம் இதுவரை பார்க்காததாக இருக்கும். - இயக்குனர் அசோக் வீரப்பன்

Published On 2022-09-22 14:56 GMT   |   Update On 2022-09-22 15:52 GMT
  • இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படம் 'பபூன்'.
  • பபூன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.


பபூன்

மேலும், ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். 'பபூன்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


பபூன் படக்குழு

இதையடுத்து 'பபூன்' படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். 'பபூன்' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில், இயக்குனர் அசோக் வீரப்பன், "இந்த படத்தில் கதாநாயகன் என்னவாக இருக்கிறாரோ அது தான் படத்தின் பெயர். இந்த படம் கடற்கரை மாவட்டங்களை சார்ந்த ஒரு கதைக்களம். இந்த களம் மிகவும் புதியதாக இருக்கும், இதுவரை பார்க்காததாக இருக்கும்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


Full View


Tags:    

Similar News