சினிமா செய்திகள்

பனாரஸ்

'பனாரஸ்' படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம் - நடிகர் ஜையீத் கான் நம்பிக்கை

Published On 2022-10-25 17:27 IST   |   Update On 2022-10-25 17:27:00 IST
  • இயக்குனர் ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பனாரஸ்.
  • இந்த படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.


பனாரஸ் புரொமோஷன் நிகழ்ச்சி

இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.


பனாரஸ் புரொமோஷன் நிகழ்ச்சி

இந்த படத்தை என் கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார். பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது. காசியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


பனாரஸ் புரொமோஷன் நிகழ்ச்சி

இதையடுத்து, 'பனாரஸ்' படக்குழு தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர்  ஜையீத் கான் பேசியதாவது, ''பனாரஸ்' படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இயக்குனர் ஜெயதீர்த்தா எனக்காக ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம். ஒவ்வொருவரும் இந்த படத்தைப் பார்த்து என்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

Tags:    

Similar News